2026 தேர்தல் களத்தை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இந்த சூழலில்தான் விஜய், திமுக -வை கடுமையாக விமர்சித்து வருகிறர். மேலும், கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -வை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜய் . மேலும் சென்னை வானகரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் ஆற்றிய உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சில காலமாகவே தமிழக பாஜக விற்கு நூல் விடுவதாக சொல்லப்பட்டது. ஆனலும், விஜய் பாஜக -வை கொள்கை எதிரி என சொல்லிவிட்ட காரணத்தால், அவர்கள் ஆசை நிராசையாகவே உள்ளது.
நேற்றைய தினம் நடந்த ஒரு நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், விஜய்யை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. விஜய் இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெறுவோம் நான் விஜய்க்கு அறிவுரை சொல்கிறேன். ஆனால் விஜயின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் இன்னொரு பலத்துடன் சேரவேண்டும்.
விஜய்யால் தனியாக சாதிக்க முடியாது என்று விஜய்க்கு எச்சரிக்கை கொடுக்கிறேன் விஜய் அரசியலில் பிழைக்க வேண்டும் என்றால் உழைக்கும் எங்களோடு இருக்க வேண்டும் தனியாக நின்று காணாமல் போய்விடக்கூடாது” என பேசியிருந்தார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை இதனை கூறினார்.மேலும் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இப்போது ஏதும் தகவல் இல்லை.இன்று முதல்கட்ட பேச்சு வார்த்தை தான் நடைபெற்றுள்ளது. ஒரு குடும்பமாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். மோடி,அமித்ஷா,பியூஸ் கோயல் உள்ளிட்டோர் இனி அடிக்கடி தமிழகம் வருவார்கள்.2026 சட்டமன்ற தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க தயாராக உள்ளோம்.திமுக இதனால் வெள வெளத்து போயிருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகள் அரண்டும் மிரண்டும் போயிருக்கிறார்கள். இன்றைய மைய குழு கூட்டத்தில் அரசியல் குறித்து அனைத்து விஷயங்களும் பேசப்பட்டது. என்டிஏ கூட்டணிக்கு யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களெல்லாம் வெற்றி பெறுவார்கள். விஜய் தனியாக நிற்பதை விட அனைவரும் இணைந்து நின்றால் வெற்றி எளிதாகும். அது விஜய்க்கும் பொருந்தும்” என்றார்.
இப்படி தொடர்ந்து விஜயை அழைப்பது, மிக வெளிப்படையாக அவர் இன்றியமையாத ஒரு சக்தியாக மாறிவிட்டார் என்பது போண்டா ஒரு தோற்றத்தை உருவாக்குவதாக தெரியவிக்கின்றனர். ஆனாலும் சில ஜனவரிக்கு பிறகு விஜய் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் சில தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், ஒருவேளை விஜய் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தால், அவரின் நம்பகத்தன்மை போய்விடும் எனவும் ஒரு தரப்பு தெரிவிக்கின்றது. ஒரு வேலை நான்கு முனை போட்டி அமைந்தால் திமுக ஆட்சி அமைக்கும் எனவும் அதற்காகவாது விஜய் கூட்டணி வைப்பார் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்