தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்களை அழைக்காதது ஏன் ?கே.எஸ்.அழகிரி கேள்வி?

தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்களை அழைக்காதது ஏன் ?கே.எஸ்.அழகிரி கேள்வி?
Published on
Updated on
1 min read

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதாக  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

கொடியேற்றும் நிகழ்ச்சி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் அடையாளமாக தமிழ்நாடு முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சென்னை கொடுங்கையூர், கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குற்றம் சாட்டிய கே.எஸ்.அழகிரி:

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் கொடியேற்றி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இடையே உரையாற்றினார். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி, தமிழ் வளர்ச்சிக்கு பாஜக முக்கியத்துவம் தருவதாக கூறிக்கொள்வது வேடிக்கையான விஷயம், உண்மையிலேயே அவர்கள் தமிழ் மொழியை ஆதரிக்க வேண்டும் என எண்ணி இருந்தால் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்களை அழைத்து இருக்க வேண்டும். ஆனால், எந்த தமிழ் அறிஞரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரியவில்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழை ஆதரிப்பது உண்மையானால் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்களை அழைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com