543 மக்களவை தொகுதியில் 39 தொகுதி தமிழகத்தில் உள்ளது. நாளை தொகுதி உயர்த்தப்பட்டால் விகிதாச்சார அடிப்படையில் தொகுதி உயர தானே வாய்ப்பு உள்ளது. தமிழக மக்களை குழப்பி அடிப்படை பிரச்சனை குறித்து பேச விடாமல் செய்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு எப்படி என விளக்கம் கொடுத்துள்ள நிலையில் திமுக ஆட்சி கலைந்து விடும் என பயப்படுகின்றனர். அனைத்து விளக்கமும் கொடுத்த பின்னர் அனைத்து கட்சி கூட்டம் எதற்கு. தமிழக பிரச்சனைகளை திசை திருப்ப மக்களை ஏமாற்றுகின்றனர்.
முதல்வரின் நேற்றைய நிகழ்வு டாடி மம்மி என புகழ்பாடும் நிகழ்வாக இருக்கிறது. பாஜகவை யார் அதிகம் திட்டுவோம் என்பதே போட்டியாக இருந்தது. 4 ஆண்டு சாதனையை சொல்லாமல் 2021 தேர்தல் பற்றி சொல்லி வருகிறார். இவருக்கு ஆட்சி நடத்துவதை விட குறை சொல்வதில் தான் அக்கறை.