ஸ்ரீபெரும்புதூரில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை...! நண்பன் கொல்லப்பட்ட பாணியிலேயே நிகழ்ந்த மரணம்..!

ஸ்ரீபெரும்புதூரில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை...!  நண்பன் கொல்லப்பட்ட பாணியிலேயே  நிகழ்ந்த மரணம்..!
Published on
Updated on
2 min read

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் பி பி ஜி டி சங்கர்(42), இவர், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும்,  பாஜகவின் எஸ்.சி எஸ்.டி பிரிவு மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது நசரத்பேட்டை சிக்னல் அருகே காரில் வந்த மர்ம நபர்கள் சங்கரின் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் நசரத்பேட்டை போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் இதில் பி.பி.ஜி.டி. சங்கர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு கொளத்தூரில் உள்ள திருமணத்திற்கு சென்று விட்டு காரில் பி.பி.ஜி.டி.சங்கர் தனியாக வந்துள்ளார் கொளத்தூரில் இருந்து இரண்டு கார்களில் மர்மகும்பல் அவரை பின் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில்,  நசரத்பேட்டை சிக்னலில் கார் நின்றபோது அவரது காரை அணைத்தார்  போல் ஒரு கார் வந்து நின்றது.

அப்போது, டிரைவர் சீட்டுக்கு அருகில் அவர் அமர்ந்து இருப்பதாக நினைத்து காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் காரின் வலது புற முன்பக்கத்தில் நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளனர். ஆனால் காரை பி பி ஜி டி சங்கர் ஓட்டி வந்ததால் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி காரில் இருந்து கையில் கத்தியோடு கீழே இறங்கியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த மர்ம கும்பல் பி.பி.ஜிடி சங்கரை வெட்ட முயற்சி செய்தனர். ஆனால் அவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு தன்னை தாக்க வந்தவர்களை வெட்டுவது போல் பாவ்லா செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அப்போது பின் தொடர்ந்து சென்ற மர்மகுபம்பல் அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி விட்டு சரமாரியாக வெட்டி உள்ளனர்.

 மேலும் இவரது நெருங்கிய நண்பர் பிபிஜி குமரன் கொல்லப்பட்டது போலவே சங்கரும் கொலை செய்யப்பட்டுள்ளார். பிபிஜி குமரன் ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்படும்போது வழக்கமாக டிரைவருடன் காரில் வரும் அவர் அன்றைய தினம் டிரைவர் இல்லாமல் அவரே காரை ஓட்டி வந்துள்ளார். அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி வெட்டி படுகொலை செய்தனர்.

அதே பாணியில் எப்போதும் டிரைவருடன் வரும் பிபிஜிடி சங்கர் நேற்றைய தினம் டிரைவர் இல்லாமல் தானே காரை ஓட்டி வந்துள்ளார். அதே போன்று அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி அறிவாளால் வெட்டி சாய்த்துள்ளனர். பி.பி.ஜி. குமரன் எப்படி கொலை செய்யப்பட்டாரோ அதே பாணியில் தற்போது பி பிஜி டி. சங்கரும் கொலை செய்யப்பட்டுள்ளதால் குன்றத்துரை சேர்ந்த பிரபல ரவுடி வைரம் என்பவரை நசரத்பேட்டை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், தற்போது நடந்த இந்த கொலைக்கு தொழில் போட்டியா? அல்லது முன்விரோதம் காரணமா?  என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பி.பி.ஜி குமரன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஸ்ரீ பெருமந்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் மண்ணூர் குட்டி என்ற வெங்கடேசனை பிபிஜிடி சங்கரின் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். 

நேற்றைய தினம் வெங்கடேசனின் நினைவு நாள் என்பதால் அதற்கு பழிவாங்கும் விதமாகவும் அதே நாளில் கொலை நடந்ததா எனவும்  பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com