

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஆனாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல், தவெக-விற்கு மேலும் 11 வேட்பாளர்கள் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், நேற்று காங்கிரஸ் காதசி கூட்டணி ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து, 28 தொகுதிகளில் போட்டியிட்டது. மேலும் 5 தொகுதிகளில் வென்று, தற்போது தவெக-விற்கு சட்டமன்றத்தில் ஆதரவு அளிக்க ஒப்புக் கொண்டது என்றும், இனி வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை சேர்ந்தே எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தது.
அதையடுத்து தற்போது கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் கூறியதாவது தமிழ்நாட்டின் நலன், எதிர்காலம் கருதி தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மாநிலத்தின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவெக-வுடன் கூட்டணி அமைக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். கூட்டணிகளில் ஏற்றத் தாழ்வுகளும், பிரிவுகளும் அரசியலில் இயல்பானவை என்றும், கடந்த காலத்தில் திமுகவும் காங்கிரஸை திடீரென கூட்டணியில் இருந்து வெளியேற்றியதை நினைவுகூர்ந்தார். அப்போது கூட திமுகவை கடுமையாக விமர்சிக்கவில்லை என்றும் கூறினார்.
திமுக தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த பிறகு கடுமையான விமர்சனங்கள் முன்வைப்பது அரசியல் நாகரிகமல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ராகுல்காந்தி குறித்து யாரிடமும் நற்சான்றிதழ் தேவையில்லை என்றும், பாஜக ஆட்சியை எதிர்த்து நிற்கும் வலிமையான தலைவர் அவர் தான் எனவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க புதிய அரசியல் பயணத்தில் முன்னேறுவோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதையடுத்து, ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் எம்பி ஜோதிமணி. “ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்புக்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. ஆளுநருக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் “பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். ஆளுநர் தவெக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” என்றும் ஆதரவை பத்தி செய்தார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.