“திமுகவின் சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்கும் பாஜக..” விஜய்க்கு தனியா ஸ்கெட்ச்!? - பீகாருக்கு பிறகு அமித்ஷா பிளான் இதுதான்!!

திமுக -விடம் கணிசமான அளவு சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. அவற்றை விஜய்..
tamilnadu political areana
tamilnadu political areana
Published on
Updated on
2 min read

தமிழகத்தின் அரசியல் களம் தற்போது தலைகீழாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. 

ஆனாலும் கரூர் சம்பத்திற்கு பிறகு அவருக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் மக்கள் ரீதியாக அல்லாமல் அரசியல் ரீதியான நெருக்கடி தான் தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன. மேலும் திமுக -வை அரசியல் எதிரி என்றும், பாஜக -வை கொள்கை எதிரி என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார். கரூர் துயரத்திற்கு பிறகும் கூட அவர் அதிமுக -வை பெரிதாக அட்டாக் செய்யவில்லை. திமுக மீதும் தான் தனது முழு கவனத்தை செலுத்தியுள்ளார். இதனால் அவர் அதிமுக உடன் கூட்டணி வைப்பார் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. ஆனால் அது அதிகாரப் பூர்வமாக ஆகும் முன்னரே ‘பிள்ளையார் சுழி போட்டாச்சு’ என எடப்பாடி வாய் விட்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூட்டணி குறித்து “ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நிலைப்பாடோ தற்போது வரை அதுதான்” என்று கூறியிருந்தார்.  அதனால் அந்த கனவும் அதிமுக தொண்டர்களிடம் இருந்து தகர்ந்தது. 

இந்த சூழலில் தான், முத்துராமலிங்கதேவரின் 118வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல முக்கிய தலைவர்கள் மதுரையில் கூடியிருந்தனர். இதில் தமிழிகக் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தொடர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் செங்கோட்டையன், பாஜக -வின் நயினார் நாகேந்திரன், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பசும்பொன்னில் கூடி அங்குள்ள தேவர் சிலைக்கு மரியாதையை தெரிவித்தனர். 

தலைவர்கள் பொது வெளியில் கூடும்போது, அவர்களின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகின்றன. இன்றைய தினம் தமிழக அரசியலில் அடுத்தடுத்த பேசுபொருளுக்கான குறியீடுகளை தலைவர்கள் விட்டுச்சென்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் நேற்று  பயணம் செய்தார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த செயல் எடப்பாடியை கடுப்பேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் நேற்று காலை மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் ஒரே காரில் பசும்பொன் கிராமத்துக்கு வந்தனர். பசும்பொன்னில் டிடிவி தினகரனும் அவர்களுடன் இணைந்தார். மூவரும் இணைந்து முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு!!

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ -வான செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவி தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்தான ஆலோசனை க சேலத்தில் நடத்தப்பட்டது, அதன் பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு தனித்திட்டம் 

இந்நிலையில் பாஜக முழுக்க முழுக்க பீகார் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அங்கு முடிந்த உடன் பாஜக -வின் பார்வை தமிழகத்தின் மீதுதான் நிச்சயம் விழும். மேலும் அமித்ஷா தமிழகத்திற்கு என தனியாக ஒரு திட்டம் வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமித்ஷா -வின் பார்வை விஜய் பக்கம் திரும்பியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் விஜய் -டுன் இம்முறை நேரடியாக கூட்டணி வைக்க முடியாது. அது விஜய் -ன் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாகி விடும். மேலும், அவர் மீதான நம்பிக்கை உடையவும் வாய்ப்புண்டு. திமுக -விடம் கணிசமான அளவு சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. அவற்றை விஜய் நிச்சயம் சிதைப்பார். எனவே திமுக -விடம் உள்ள மொத்த சிறுபான்மையினர் வாக்குகளையும் பெற பாஜக ஒரு புது கூட்டணிக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பாஜக தலைமை பொறுப்பிலிருந்து நீங்கியதிலிருந்து அண்ணாமலை தனிக்கட்சி அமைக்க உள்ளார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. 

மேலும் முக்குலத்தோர் வாக்குகளை பெறக்கூடிய வகையில் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இவர்களோடு செங்கோட்டையன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புண்டு. 

அமித்ஷா -வின் திட்டம் என்னவென்றால், அண்ணாமலை, விஜய், அதிமுக -விலிருந்து பிரித்தோரை வைத்து ஒரு மறைமுக கூட்டணி வைக்க உள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு தொங்கு சட்டமன்றம் உருவானால் இந்த மறைமுக கூட்டணியை வைத்து ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு  உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com