வட மாநிலத்தவர் ஆதிக்கத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம்!!

வட மாநிலத்தவர் ஆதிக்கத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகை போராட்டம்!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தவர் ஆதிக்கத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடைபெற்றுள்ளது.

மத்திய அரசு துறைகள், உயர் கல்வித் துறைகள், உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் மற்றும் தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவர் ஆதிக்கத்தை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

குறிப்பாக ஜனாதிபதி செயலகம்,துணை ஜெயாதிபதி செயலகம்,கேபினட் செயலாளர்,பிரதமர் அலுவலகம், விவசாயத்துறை,பாதுகாப்பு அமைச்சகம்,சுகாதார அமைச்சகம் நிதி அமைச்சகம்,இந்திய தூதரர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அஞ்சல் மற்றும் ரயில்வே துறை அவற்றில் மொத்தமாக 80 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி நடத்தப்பட்ட இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com