
நேற்றைய தினம், தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.
ஆனால் நேற்றைய தினம் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 40 -பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
மேலும் இந்த சூழலில் விஜய் -க்கு எதிராக பலர் கொதித்தெழுந்துள்ளனர். மேலும், காலையிலேயே அவர் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு இ.மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.