பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் இளைஞரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை...

பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் இளைஞரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் இளைஞரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை...
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர், நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என தெரியவந்தது.

இதனையடுத்து தொடர்பு கொண்ட நபரின் செல்போன் எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தியதில், மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க மாவட்ட ஆட்சியருக்கு காவல்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com