இனி 200 கி.மீ தூரத்திற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்...போக்குவரத்துத்துறை அதிரடி!

இனி 200 கி.மீ தூரத்திற்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்...போக்குவரத்துத்துறை அதிரடி!
Published on
Updated on
1 min read

200 கிலோ மீட்டர் வரையிலான குறைந்த தொலைவு பேருந்து பயணங்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது. 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைத்தூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் முழுவதும் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இந்நிலையில் முன்பதிவு சேவையை விரிவாக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள செய்திக் குறிப்பில், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி வழியாக முன்பதிவு செய்ய முடியும். இந்த சூழ்நிலையில், 200 கிலோ மீட்டா் தொலைவு வரையில் பயணிக்கும் பயணிகளுக்கும் முன்பதிவு திட்டம் விரிவாக்கப்படுகிறது. 

அதன்படி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com