
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கார் முன்பக்க பம்பரில் இழுத்து செல்லப்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் கார், ஜீப்களின் முன்னால் மற்றும் பின்னால் கூடுதலாக உள்ள பம்பரை அகற்ற உத்தரவிட்டது.
இதனையடுத்து முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் கார்கள் மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தியிருந்த பம்பர்கள் அகற்றப்பட்டன. தமிழக அரசும் உடனடியாக அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் அரக்கோணம் நகராட்சியில் ஆணையர் மற்றும் நகரமன்ற தலைவருக்கு நகராட்சியால் வழங்கப்பட்ட வாகனங்களில் பம்பர் அகற்றப்படாமல் உள்ளது.
இதையடுத்து அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை மோட்டார் வாகன போலீசார் கூறினார். இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையர் மற்றும் நகரமன்ற தலைவர் வாகனத்தில் உள்ள பம்பர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.