வெயிலின் தாக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு காவல் துறை சார்பில் நீர் மோர் பந்தல்...!

வெயிலின் தாக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு  காவல் துறை சார்பில் நீர் மோர் பந்தல்...!
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் காவல் துறை  சார்பில் பொதுமக்களுக்கு  நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கருவேப்பிலை, மல்லி, புதினா  கலந்த இலவச மோர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பொதுமக்களின் மீது அக்கறையுடன் போலீசார் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு  சமூகஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி போலீசார் சார்பில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் அவர்களின் தாகத்தை போக்கிடும் வகையில் இரண்டு மாத காலத்திற்கு நீர் மோர் பந்தல் அமைத்துள்ளனர்.

கமுதி பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் திறந்து பொது மக்களுக்கு நாள்தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கமகமக்கும்  மோர் கடைந்து பொதுமக்களுக்கு நாள்தோறும் இலவசமாக விநியோகித்து வருகின்றனர். அவர்களின் பணி பொதுமக்களில் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

24 மணி நேரமும் சுத்திரிக்கப்பட்ட குடிநீர்சுட்டெரிக்கும் கடும் வெயில் நேரத்தில் மட்டும் கருவேப்பிலை மல்லி செடி புதினா ஆகியவற்றுடன் மத்தையால் கடைந்து எடுத்து   கமகம மனத்துடன் ருசியுடன் நாள்தோறும் இலவசமாக மோர் விநியோகித்து வருகின்றனர். பொதுமக்கள் மீது காக்கிளின் கருணை கொடை உள்ளம் இதுபோன்ற செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com