
இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார் ட்ரம்ப் – இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கேள்வி கேட்கப்பட்டது ஆனால் பிரதமர் மோடி இதற்கு பதிலே சொல்லவில்லை, இது அவரது பலவீனத்தின் அடையாளம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது திடீரென பாசம் பொங்கி வருகிறது – இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கியூபா ஒருமைப்பாட்டு தேசிய குழு மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக "சோசியலிச கியூபாவை காப்போம்", "ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்" மற்றும் "ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டை கொண்டாடுவோம், ஆகிய தலைப்புகளில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் நிகழ்வில் சிபிஐ(எம்) அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, கியூபா குடியரசின் இந்திய தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் அகிலேரா, சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மூன்று முக்கியமான நோக்கங்களைக் கொண்டு இந்த முப்பெரும் விழா ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கு வர வேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அண்மையில் சிறு உடல் நலம் குறைவு காரணமாக மருத்துவமனையில் செல்லும் முன் அறிவாலயத்தில் தோழர்களை சந்தித்து இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று அழைத்தார்கள். என்னுள் பாதியாக இருக்கும் செங்கொடி தோழர்களை அழைப்பை ஏற்று வந்திருக்கிறேன்.
இதை நான் ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், நமக்குள் இருக்கும் தோழமை என்பது அரசியல் லாபத்திற்காக அல்ல தேர்தல் லாபத்திற்காக அல்ல. நமக்குள் இருப்பது கொள்கை நட்பு, கோட்பாடு நட்பு, லட்சிய நட்பு இதுதான் பலருக்கும் கண்ணை உறுத்துகிறது. அதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமிக்கு அண்மையில் கம்யூனிஸ்ட்கள் மீது அதீத பாசம் பொத்துக்கொண்டு வருகிறது.
நாட்டில் யார் யார் எதைப் பேசுவது என்பதை இல்லை., கண்டதெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அடிமைத்தனத்தை பற்றி பழனிச்சாமி பேசலாமா ? அவருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை! பழனிசாமி அவர்களே நீங்கள் செய்தித்தாள் படிக்கிறீர்களா? என்று சந்தேகம் வருகிறது. அதிலும் நிச்சயமாக தீக்கதிர் படிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்காது. இருந்திருந்தால் இப்படி எல்லாம் நீங்கள் பேச மாட்டீர்கள்.
நான் நாள்தோறும் தீக்கதிர் படிக்கிறேன், கலைஞர் கத்துக்கொடுத்த பாடம் அது, நம் தோழர்கள் டிவி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொல்லும்பொழுது எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் விவாதம் நிகழ்ச்சியில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்கிறேன். எல்லோருடைய பேச்சுக்களையும் விவாதங்களையும் நான் பார்க்கிறேன். அவர்கள் சுட்டிக் காட்டுவதில் உடன்படுவது எது என்பதை எடுத்துக் கொண்டு. அதன் மீது நடவடிக்கை எடுக்கிறேன்.
கூட்டணி இருக்கு என்று கம்யூனிஸ்டுகள் சுட்டிக்காட்டாமல் இருப்பதும் இல்லை.! அவர்கள் சுட்டிக்காட்டியதை நான் புறக்கணித்ததும் இல்லை. ஏனென்றால் எங்களின் பாதி கம்யூனிஸ்டுகள் என்னுடைய பெயரே ஸ்டாலின் தான். நட்புடன் சொல்வது எது? உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவது எது? எங்களுக்கு பிரித்துப் பார்க்கத் தெரியும். கொள்கை தெளிவும், நட்பின் புரிதல் கொண்டவர்கள் நாங்கள். அதன் அடையாளம் தான் இந்த நம்ம மேடை.
அமெரிக்கா கியூபா மீது எப்போதுதெல்லாம் கை வைக்கிறதோ அப்போது தேனீக்கள் போல அமெரிக்காவில் கொட்டுகிறது கியூபா. அந்த கூடை காக்கும் நபர்தான் பிடல் கேஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் நான் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன்.
உலகில் பல புரட்சிகள் நடந்திருக்கிறது எல்லா புரட்சிகளும் வெற்றி கண்டதில்லை. சில தான் வென்றுள்ளனர், அப்படி வெற்றி பெற்றவர் தான் பிடல் காஸ்ட்ரோ தான் 17 ஆண்டுகள் காலம் கியூபாவின் தலைவர்.
உலகம் முழுவதும் நடைபெறும் ஏகாதிபத்திய சதிகளை முறியடிக்கும் நெருக்கடி இப்போதும் இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை முறியடிப்பது என்பது ஏதோ போர் தொடுப்பது மட்டுமல்ல. இந்தியாவுக்கு 50% சதவீத வரியை அமெரிக்கா விதித்துதும் இதுபோன்ற சதி தான். ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் மோடியும் கடுமையான எதிர்ப்பை வெளிபடுத்த வேண்டும்.
இந்தியா அமெரிக்கா இடையே 5 சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் 6–வது சுற்று பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாக எதற்கு தன்னிச்சையாக டிரம்ப் வரி விதிப்பை செய்ய வேண்டும் ?
இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார் ட்ரம்ப். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கேள்வி கேட்கப்பட்டது ஆனால் பிரதமர் மோடி இதற்கு பதிலே சொல்லவில்லை, இது அவரது பலவீனத்தின் அடையாளம்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.