கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு ரத்து!

கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு ரத்து!
Published on
Updated on
1 min read

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரனோ நோய் தொற்றால் இறந்தவர்களின்  புள்ளி விவரங்கள் முறையாக வெளியிடபடவில்லை என குற்றம்சாட்டி, திமுக அரசிற்கு எதிராக கடந்த 2021ம் ஆண்டு தர்மபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

கொரனோ தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றமால் போராட்டம் நடத்தியதாக வெள்ளங்கொண்ட பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.பி.அன்பழகன் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தர்மபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கே.பி.அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் பதியபட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை வழங்கும் பிரிவில் பதியபட்டுள்ளதால், கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com