சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்..! படம் பிடித்து OLX -ல் விற்ற பலே திருடன்!!

உடனடியாக காரை வாங்கிக் கொள்வதாக கூறி பிரதீப் ராஜாவை போனில் அழைத்து ஒரு 1.25 லட்சம் வரை ...
man stole a car
man stole a car
Published on
Updated on
1 min read

சென்னை வியாசர்பாடி பகுதியில் வசிப்பவர் ரபேல், 63 வயதாகும் இவர் தனது வீட்டின் அருகே பழுத்த பார்க்கும் “ஒர்க் ஷாப்” ஒன்றை வைத்துள்ளார். இவரின் கடையில் ராணி என்ற பெண் காரை பழுதுபார்க்க 10 நாட்களுக்கு முன் விட்டு சென்றுள்ளார். 

இந்நிலையில் அந்தக் காரை கடையின் எதிரே உள்ள சாலை ஓரத்தில் ரபேல் நிறுத்தி வைத்திருந்தார். இந்த சூழலில் தான் கடந்த 1 -ம் தேதி இந்த கார் காணாமல் போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரபேல் கார் திருடுபோனது தொடர்பாக உடனடியாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர், அதில் காரை திருடி சென்ற நபர் கடலூர் மாவட்டம் வேப்பூர் சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியத்தில் பல வினோத்தமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பழுதுபார்ப்பதற்காக  சாலையோரம் நிறுத்தப்பட்ட காரை நோட்டமிட்ட  பிரதிப் ராஜா என்பவர் அவர் செல்போனில் காரை படம் பிடித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளதாக ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் அரவிந்த் இதை பார்த்து இருக்கிறார.  உடனடியாக காரை வாங்கிக் கொள்வதாக கூறி பிரதீப் ராஜாவை போனில் அழைத்து ஒரு 1.25 லட்சம் வரை பேரம் பேசி பணத்தையும் கொடுத்து காரையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ரெக்கவரி வாகனத்தை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் காரை தனது இடத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். எந்த  ஆவணமும் இல்லாமல் காரை வாங்கியதால் அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

போலீசார் கைது  செய்யும் போது தான் இந்த விவரம் அரவிந்துக்கே தெரிய வந்திருக்கிறது.அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பழுது பார்க்க விடப்பட்ட காரை தனது காரர் என்று கூறி அதை பாதி விலைக்கு விற்ற பிரதீப் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் பின்னணி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com