நள்ளிரவில் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் 50 பேர் மீது வழக்கு!

நள்ளிரவில் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் 50 பேர் மீது வழக்கு!

Published on

பாஜக நிர்வாகி சூர்யா கைதை கண்டித்து நள்ளிரவில் காவல் ஆணையரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பற்றி அவதூறு கருத்து பதிவுட்டதாக தமிழக பாஜக மாநில செயலாளர் சூர்யாவை மதுரை போலீஸார் நேற்று நள்ளிரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். 

இதனை கண்டித்து நேற்று நள்ளிரவு பாஜகவினர் 50 பேர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனையடுத்து வேப்பேரி போலீஸார் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாலா செல்வகுமார், வழக்கறிஞர் அணி துணை தலைவர் மாலினி, இளைஞர் அணி மாநில துணை தலைவர் ஜீவா, ஐடி விங் மாநில தலைவர் மகேஷ், மகளிரணி மாநில பொதுச்செயலாளர் நதியா உட்பட 50 பாஜகவினர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கலகம் செய்ய சட்டவிரோதமாக கூடுதல் ஆகிய பிரிவின் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com