சி.வி.சண்முகத்திடம் வாக்குமூலம் பெற்ற சிபிசிஐடி அதிகாரிகள்!

பல்வேறு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக முன்னாள் அமைச்சரும், மாநிலங்கவை உறுப்பினருமான சி.வி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சி.வி.சண்முகத்திடம் வாக்குமூலம் பெற்ற சிபிசிஐடி அதிகாரிகள்!
Published on
Updated on
1 min read

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவர சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்திடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதிமுக அலுவலக வழக்கு

கடந்த ஜூலை 11 அன்று ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இரு தரப்பும் மோதிக் கொண்டதில் காவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சி.வி.சண்முகம் புகார்

இச்சம்பவத்தின் போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களால் அ.தி.மு.க தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டு, கட்சி நிதி, ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக முன்னாள் அமைச்சரும், மாநிலங்கவை உறுப்பினருமான சி.வி சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிபிசிஐடி விசாரணை

சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு முறை விசாரனை நடத்திய சிபிசிஐடி போலீசார், கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்படவுள்ளதால், எம்.ஆர்.சி நகரில் உள்ள புகார்தாரர் சி வி சண்முகம் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்றுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com