சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு...மீனவ மக்கள் வேலை நிறுத்த போராட்டம்!

சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய்  உடைப்பு...மீனவ மக்கள் வேலை நிறுத்த போராட்டம்!
Published on
Updated on
1 min read

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில், மீண்டும் பழுது நீக்கும் பணியில் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வருகிறது.

குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் தண்ணீரில் குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது. அதனால் உயரழுத்தத்தில் குழாயில் ஆயில் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும்  சிபிசிஎல் குழாய் கசிவை இரண்டு ஜேசிபி மூலம்  மண் மூட்டைகள் அடுக்கி கடல் நீர் உட்புகா வண்ணம் அமைக்கப்பட்டு தற்போது தேங்கியுள்ள கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான டோனியர் விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, இந்த குழாயை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com