
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியவர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தன்னுடைய சுற்றுப்பயணம் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
மக்களுக்காக எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தொடங்கினர். தீயசக்தி தி.மு.கவை ஒழிக்க வேண்டும். அதற்காகத்தான் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை 7ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கவுள்ளேன் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில். தி.மு.க.ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிற கட்சிகள் எல்லாம் எங்களோடு அணி சேர வேண்டும்.
- வீடு வீடாக போய் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
- இந்தப் இந்த சுற்றுப்பயணம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும்.
- திமுகவை ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணுகின்ற அனைத்து தோழமைக் கட்சிகளையும் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என என் அழைப்பை பதிவு செய்கிறேன்.
- அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு அது விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
- மேலும் திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் என்னென்ன நிறைவேற்றப்படவில்லை என்பதை குறித்து எல்லாம் இந்த சுற்று பணிகளை மக்களிடம் எடுத்துரைப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனி சாமிக்கு
இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தாக்கம்:
எடப்பாடி பழனி சாமியின் இந்த சுற்று பயணம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கள நிலவரங்களை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். மேலும் தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே கூட்டணியையும் அறிவித்து தேர்தல் பயணத்தையும் துவங்கிவிட்டார். இந்த போக்கை அவர் தேர்தல் நாள் வரை கையாண்டால் மட்டுமே மக்கள் மனதில் நிலைத்திருப்பார். மேலும் திமுக மீது தற்போது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் இந்த சமையத்தில்தான் எடப்பாடி சிறப்பாக செயல்பட முடியும், ஆனால் அதுக்கும் முட்டுக்கட்டையாக தற்போது பாஜக உள்ளது. இன்னமும் களத்தில் பாஜக அதிமுக கூட்டணி சங்கமிக்கவில்லை எனவே இந்த இரு கட்சிகளும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அவர்கள் விரும்புவதை அவர்களால் செய்ய முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.