இந்தியில் மாற்றப்பட்ட சட்டங்களின் பெயர்...கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்தியில்  மாற்றப்பட்ட சட்டங்களின் பெயர்...கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

சட்டங்களின் பெயர்களை மாற்றி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி நேற்றைய தினம் 11.08.2023 முடிந்தது. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தொடரில், ஐபிசி, ஐஆர்பிசி, ஐஇசி ஆகிய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இந்திய குற்றவியல் சட்டத்துக்கு பதிலாக பாரதிய நியாய சம்ஹிதா 2023 எனவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 எனவும், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு பதிலாக பாரதிய சாக்‌ஷிய விதேயக் 2023 எனவும் 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய சன்ஹிதா என பெயர் மாற்றி சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது இந்திய ஒற்றுமைக்கான அடித்தளத்தைச் சீர்குலைக்கும் செயல் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மொழியியல் ஏகாதிபத்யத்தின் சீற்றம் என்றும் விமர்சித்துள்ள முதலமைச்சர், மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக உறுதியுடன் போராடும் என்றும் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com