
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு வழி ஆகிவிடும் என்பது தான் உண்மை. திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -விலும் சற்று சலசலப்பு குறைந்து இப்போதுதான், அதிமுக - பாஜக கூட்டணி பலப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ‘அதிமுக -விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதி அவர் தமிழக மக்களின் நலன் காக்க மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அதிமுக -வினர் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “நனடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடக்கவிருப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற மனநிலையோடு நாம் ஒன்றிணைய வேண்டும்.
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல அதிமுக பிரிந்து கிடப்பதால் அதில் திமுக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறது. திமுக எனும் தீய சக்தியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும். அதிமுக ஒன்றிணைவதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தமிழக அரசியலில் இருபெரும் தலைவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் இன்று விலகி இருப்பது சரி அல்ல. நாம் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிமுக -விற்குள் நுழைய விருப்பும் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க விரும்பாததை, இந்த அறிக்கையின் மூலம் உணர முடிகிறது. இந்த அறிக்கையில் கழக பொதுச்செயலாளர் வி.கே சசிகலா என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதிமுக அழைப்பு விடுத்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.