
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு பயணம் மேற்கொண்டிருந்தார். கடந்த 30ம்தேதி புறப்பட்டு சென்றிருந்த அவர் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் முன்னணி தொழில் அதிபர்களை சந்தித்தார். அப்போது ரூ.15,516 கோடிக்கு தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
லண்டன் சென்றிருந்த போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் உருவபடத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தார். ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள தமிழர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
குறிப்பாக, ஜெர்மனியில் முதல்வர் சுற்றுப்பயணத்தின் போது 26 நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தம் 7020 கோடி முதலீட்டில் 15320 அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது ஆகும்.
அதேபோல் இங்கிலாந்தில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் 17,613/ நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.