"தீபாவளி புகையால் திணறும் சென்னை.. 'மிக மோசம்' என பதிவான காற்றின் தரம்" - தரையிறங்க முடியாமல் வட்டமடித்த 11 விமானங்கள்!

நேற்றைய தினம், சர்வதேச அளவிலான காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளுடன் 'மிக மோசமான' பிரிவில் சென்னை இடம்பெற்றது.
Chennai AQI today
Chennai AQI today
Published on: 
Updated on: 
2 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையின் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது. நகரின் சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) 159 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று விட்டுவிட்டு மழை பெய்தபோதிலும் காற்றின் தரம் மோசமடைந்துகொண்டே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குறிப்பாக, சென்னையில் நேற்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். தீபாவளி ஒருபுறம் இருந்தபோதிலும் மறுபுறம் சென்னையில் பரவலாக மழை பெய்துவந்த வண்ணமே இருந்தது. நேற்றையபொழுது சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சென்னையின் தொழில்பேட்டைப் பகுதியான மணலியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசமாக 246 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், வடசென்னையின் முக்கியப் பகுதியான ராயபுரத்தில் காற்றின் தரம் 238-ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், சர்வதேச அளவிலான காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளுடன் 'மிக மோசமான' பிரிவில் சென்னை இடம்பெற்றது.

பொதுவாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரநிலைகளின்படி, காற்றின் தரக் குறியீடு 0 முதல் 100 வரை இருந்தால் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான காற்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே காற்றின் தரக் குறியீடு 200-க்கு மேல் தாண்டினால் சுவாசிப்பதற்குச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடியது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Chennai AQI today
Chennai AQI today

குறிப்பாக சென்னையில் காற்றின் தர குறியீடு 200க்கு மேலாக பதிவானால் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டி உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் சுவாசக் கோளாறு பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறிது அசோகரித்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டது. மேலும், இன்று காலை 8:05 நிலவரப்படி சென்னையின் காற்றின் தரக்குறியீடு 211 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 274, அரும்பாக்கத்தில் 263, கொடுங்கையூரில் 210 என காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. ராயபுரத்தில் மோசமான நிலை நிலவியபோதும் தற்போது மிதமான நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்குடி - 189, ராயபுரம் - 184, வேளச்சேரி - 143 போன்ற பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவில் நீடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 237 என்று காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் 158, கடலூரில் 160 என காற்றின் தரக்குறியீடு மிதமான அளவில் நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, காற்றின் மோசமான தரத்தின் காரணமாகவும், புகை மண்டலமாக மாறியதை அடுத்து, சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், பரங்கிமலை, நங்கநல்லூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், மணப்பாக்கம், கவுல் பஜார், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் மழை இல்லாததால் பட்டாசு வெடிக்கப்பட்டன. இதனால் விமானம் ஒடுபாதை முழுவதும் புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு கொல்கத்தா, டெல்லி, புனே, இலங்கை, பாங்காக், திருவனந்தபுரம், சிங்கப்பூர், ராய்ப்பூர், திருச்சி உள்பட நகரங்களில் இருந்து வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நடுவானில் நீண்ட நேரமாக வட்டமடித்துள்ளன. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ராய்ப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம் வட்டமடித்த தரையிறங்க முடியாமல் விமானம் பெங்களூரூக்கு திருப்பிடப்பட்டன.

அதே போல் சென்னையில் கொல்கத்தா, மலேசியா, துபாய், டெல்லி, பாங்காக், திருச்சி, சிங்கப்பூர் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளன. கடந்த 2025ம் ஆண்டு தீபாவளி காரணமாக ஏற்பட்ட மாசினால் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டநிலையில், இந்த ஆண்டு 26 விமான சேவைகள் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.