சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்...82 புதிய அறிவிப்புகளை அறிவித்தார் மேயர் ப்ரியா!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்...82 புதிய அறிவிப்புகளை அறிவித்தார் மேயர் ப்ரியா!
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில், 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா அறிவித்தார். 

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  மேயர் பிரியா தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் 82 புதிய திட்டங்கள் இடம் பெற்றன. குறிப்பாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சி செலுத்தும் என்று கூறினார்.  

மேலும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து, 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

அத்துடன், சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 55 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்படும் என்றும், தமிழ்நாடு நகர்புற சாலைகள் 327.63 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்றும் மேயர் ப்ரியா கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com