சென்னை மாநகராட்சி; காலியாகவுள்ள 2 வார்டுகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்!

சென்னை மாநகராட்சி; காலியாகவுள்ள 2 வார்டுகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்!

Published on

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 2 வார்டுகளுக்கு செப்டம்பரில் இடைத்தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், 122 ஆவது வார்டு திமுக மாமாமன்ற உறுப்பினர் ஷிபா வாசு, 165 ஆவது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். இதேபோல், கடந்த 7-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தின பேரணியில் பங்கேற்ற 146-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் காலமானார்.

இதனால் சென்னை மாநகராட்சியில் தற்போது 3 வார்டுகள் காலியாக உள்ளது. இதில் 122 மற்றும் 165 வார்டுகளை காலியானதாக அறிவித்து,  அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்காக மாநகராட்சி மாமன்ற செயலர் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த மாதம் இந்த இரு வார்டுகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com