இ-டெண்டரில் குறைபாடு... ரத்து செய்த சென்னை மாநகராட்சி...

மழைநீர் வடிகால்களை சீரமைக்க விடப்பட்ட ரூ.120 கோடி மதிப்பிலான இ-டெண்டரில் குறைபாடு இருந்ததையொட்டி ரத்து செய்தது சென்னை மாநகராட்சி.
இ-டெண்டரில் குறைபாடு... ரத்து செய்த சென்னை மாநகராட்சி...
Published on: 
Updated on: 
1 min read

சென்னையில் 144  இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் சீரமைக்க விடப்பட்ட 120 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. கடந்த 2019ல் பெய்த பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள் பெருமளவில் பாதிப்படைந்தன.

இதையடுத்து உலக வங்கி நிதியுடன் 144 இடங்களில் 43 தொகுப்புகளாக மழைநீர் வடிகால்களை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. இதில் 42 டெண்டர்கள் பிப்ரவரி மாதம் 24ம் தேதி பெறப்பட்டது.

இந்நிலையில் இந்த டெண்டரில் குறைபாடு உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை தெரிவித்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான குறுகிய கால இ- டெண்டர் நடைமுறை விரைவில் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com