பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் நடந்த ஆண்டு விழா!

பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கணக்குகள் துறையின் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடந்தது.
பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் நடந்த ஆண்டு விழா!
Published on
Updated on
1 min read

பாதுகாப்பு கணக்குகள் துறையானது 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுவப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் அக்டோபர் 01, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலங்களிலும் பாதுகாப்பு கணக்குகள் துறையின் நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வில் விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, இரத்ததானம் உள்ளிட்ட  பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் ஜெயசீலன் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தலைமையில் நடைபெற்றது. அருண் (General office commanding) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அதில் பேசிய போது, "இந்த அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய 5 பேருக்கு பதக்கங்கள் வழங்கினேன். அதில் பணிபுரியும் செல்வி என்ற பார்வையற்றவருக்கு பதக்கம் கொடுத்தது பெருமையாக உள்ளது. இதுவரை நான் 1200 பதக்கங்கள் பல்வேறு நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கொடுத்துள்ளேன். இன்று பார்வையற்ற ஒருவருக்கு பதக்கங்கள் வழங்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 400 ற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com