
வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சென்னையில் ரூ. 25 அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிலிண்டர்களின் புதிய விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் ரூ.1892 க்கு விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1917 ஆக அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.