புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிகட்டுகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,45,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகள் கூடுதலாக நிறுவப்பட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புரட்சித்தலைவா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும் படிகட்டுகள் பொதுதளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்றுவர இன்று திறக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை இனிவரும் காலங்களில் ஒரு சில மெட்ரோ இரயில் நிலையங்களில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), இன்று (31.03.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்). கூடுதல் பொது மேலாளர் எஸ் சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் உடன் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: விரிவான விசாரணை அறிக்கை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படும்...!!!