

அர்னாப், முரசு புயல்களைக் கடந்து சென்னைக்கு அடுத்த மழைப்பொழிவு வருகின்ற நவம்பர் 6 - 8 தேதிகளில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
முரசு புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில் அதன் தாக்கத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழைப் பொழிவு ஏற்பட்டது.
தலைநகர் சென்னைக்கு அடுத்த மழைப்பொழிவு புயலாக இல்லாமல் வழக்கமான பருவகால மழையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இந்த தேதிகளில் சரியாக தீபாவளி விழாவும் வருவதனால் கொண்டாட்டங்கள் தடைபடும், குழந்தைகள் பட்டாசு வெடிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.
வானிலை ஆர்வலர் ராஜாவின் பதிவின்படி, மழை பெரும்பாலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தான் இருக்கும் என்றும் வெள்ளம் ஏற்படும் அளவு பெருமழையாக இல்லாமல் சாதாரண மழையாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு அமைந்தால் தீபாவளி சிறப்பானதாக அமையும்.
மேலும் இந்த மழைப் பொழிவு சென்னையில் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.