சென்னை அடுத்த புழலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புழலில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 21 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 30,000 ரொக்கம் கொள்ளை
சென்னை அடுத்த புழலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Published on
Updated on
1 min read

சென்னை அடுத்த புழல் லிங்கம் 1-வது தெருவை சேர்ந்தவர் ஆட்டோ மெக்கானிக் சிவக்குமார். அவரது உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பூவிருந்தவல்லி சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 10,000 ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், செல்போன் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதேபோல், அருகில் வசிக்கும் கட்டிட மேற்பார்வையாளர் செந்தில்குமார் என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து 11 சவரன் தங்க நகைகள், 20000 ரொக்கம், மின்சாதன பொருட்கள் கொள்ளை போயுள்ளது. 

இந்த சம்பவங்கள் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com