"இனி குடை இல்லாம வெளிய வராதீங்க.." இந்த ஆண்டு 'வெள்ளம்' வருமா?.. ஆறுதல் சொன்ன வானிலை நிபுணர்!

நாள் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்காது. அவ்வப்போது மேக மூட்டமாகவும் சூரிய வெளிச்சமும் காணப்படலாம்.
Chennai Rains: Will There Be Floods This Year? Weather Expert Reassures Public!
"இனி குடை இல்லாம வெளிய வராதீங்க.." இந்த ஆண்டு 'வெள்ளம்' வருமா?.. ஆறுதல் சொன்ன வானிலை நிபுணர்! AI Generated
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. சென்னையில் இதன் முதல் மழை இன்று காலை அண்ணாநகரில் தொடங்கியது. மதியம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த மழையின் போக்கு தொடரலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த சமூக வலைத்தள பதிவில், "இடைவெளி விட்டு விட்டு திடீர் திடீரென மழை பொழியும்.

அவ்வப்போது கனமழையாக பொழியலாம்.

நாள் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்காது. அவ்வப்போது மேக மூட்டமாகவும் சூரிய வெளிச்சமும் காணப்படலாம்.

மழைப்பொழிவின் நேரம், கால அளவு மற்றும் தீவிரம் ஆகியவை இடத்திற்கு இடம் மாறுபடும்." எனக் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு வாரத்துக்கு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விட்டு விட்டு மழை பொழியும் போக்கு தொடரும் என்று கூறியவர், குடை அல்லது ரெயின் கோட் இல்லாமல் வெளியே வார வேண்டாம் என அட்வைஸ் செய்துள்ளார்.

"எப்போது சர்பிரைசாக மழை உங்களைத் தாக்கும் என சொல்ல முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.

மிக முக்கியமாக, "இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் சென்னைக்கு நன்றாக அமையப்போகிறது. ஒவ்வொரு மழையும் வெள்ளமாக மாறாது, நமக்கு இந்த மழை வேண்டும். வடகிழக்கு பருவமழையை அனுபவிப்போம்." எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com