கடந்த மாதம் 25 தேதி சூளைமேடு அண்ணா நெடும்பாதை பகுதியில் கொக்கின் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட பையாஸ் அஹமத், சந்திரசேகர ரெட்டி, பாசில் அஹமத் ,ஜூலியன் டிசான், மயூர் பிராட் ,உள்ளிட்ட ஐந்து நபர்களை தனிபடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், இதனை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இருந்தனர், இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் 5 நபர்களையும் வரும் 27ஆம் தேதி வரை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தற்போது கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..