மனிதநேயத் திருநாள்
"மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மக்கள் முதல்வரின்" மனிதநேயத் திருநாள் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திரைப்பட நடிகர் இயக்குனர் கரு பழனியப்பன் பேச்சு:
ஸ்டாலின் கலைஞரின் இடமல்ல அதைத் தாண்டிய இடத்தையும் நிரப்புவார்....
கலைஞர் செய்யாத காரியமான ஆளுநரை சட்ட சபையை விட்டு வெளியேற்றுகிற வேலையையும் செய்து விட்டார். தி.மு.க வின் தொண்டராக எல்லாவற்றுக்கும் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்நால் போதும் என்று நினைப்பார்கள் ஆனால் இதற்கு எடுத்துக்காட்டு "அண்ணா" தான் காரணம் அண்ணா எப்போதும் சொல்லுவார் உடனடியாக நடவடிக்கை எடுப்பது பெரிய விஷயமல்ல ஆட்சி என்கிற கரண்டியும் அதில் பொறுப்பு என்ற எண்ணெயும் இருப்பதால் நிதானம் தேவை என்று சொல்லுவார் அது போல தான் ஸ்டாலின் அவர்களும் என பேசினார்.
மேலும் திரைக்கலைஞர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஆர்.கே செல்வமணி ஆந்திர மாநில சுற்றுலா கலாச்சாரம் இளைஞர்நலத் துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா,கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.