"சட்டத்தின்படியும் மனசாட்சியின்படியும் பணியாற்றுங்கள்" முதலமைச்சர் அறிவுரை!

"சட்டத்தின்படியும் மனசாட்சியின்படியும் பணியாற்றுங்கள்" முதலமைச்சர் அறிவுரை!
Published on: 
Updated on: 
1 min read

"சட்டத்தின் படியும் மனசாட்சியின் படியும் பணியாற்றுங்கள்" என்று குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களை இந்த இடத்திற்கு உயர்த்தியவர்களை மறக்காதீர்கள் என்றும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.  பணி உயர்ந்த பணி என்பதையும் கடந்து, தனி பொறுப்பும், கடமையும் உள்ள பணி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மக்கள் தான் நமக்கு உயரதிகாரிகள் என்றும், சட்டத்தின்படியும். மனசாட்சியின்படியும் பணியாற்றுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முழுமையாக சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும், உரியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com