திமுக கவுன்சிலர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்..!

திமுக கவுன்சிலர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்..!
Published on
Updated on
1 min read

இன்று சென்னை மாநகராட்சியின் 59 வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக பிற்பகலில் உயிரிழந்தார். 

இதனையடுத்து அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க. ஸ்டாலின் மற்றும் சென்னை மாநகராட்சியின் மேயர் ஆர். பிரியா ஆகியோர் தங்களது  இரங்கலைத் தெரிவித்தனர்.

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இரங்கல் செய்தி”

பெருநகர சென்னை மாநகராட்சியின் 59-ஆவது வார்டு உறுப்பினரும், தி.மு.கழக துறைமுகம் மேற்குப் பகுதி துணைச் செயலாளருமான திருமிகு. சரஸ்வதி கருணாநிதி அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.

சீரிய மக்கள் பணியால், தனது பகுதியில் உள்ள ஒவ்வொருவரது வீட்டிலும் அங்கமாகி சரஸ்வதி அவர்கள் நற்பெயர் பெற்றிருந்தார்.  அந்த வகையில், ஒரு சிறந்த பெண் அரசியல் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.கழகத் தோழர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பெருநகர சென்னை மாநகராட்சி  மேயர்  ஆர். பிரியா இரங்கல்:- 

” பெருநகர சென்னை மாநகராட்சி 59 -  வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சரஸ்வதி அவர்கள் இன்று (18.09.2023) மாலை உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரது இறப்பு நமக்கும், கழகத்திற்கும், SM நகர் உட்பட 59 வது வார்டு பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அண்ணாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com