அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர்!

Published on
Updated on
1 min read

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமுக்கு 21 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 அடி உயர  திருவுருவ சிலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், 7 அடி உயர அப்துல் கலாமின் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வெள்ளக்கோவில் சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com