ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு... ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் நடவடிக்கை...

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு... ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் நடவடிக்கை...
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு பரவி வரும் நிலையில் அதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், படுக்கை வசதிகள், உள்ளிட்டவையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஒமிக்ரான் பாதிப்புக்காக 136 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டது. அந்த வார்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். 

இதனைத் தொடர்ந்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார். கொரொனா பாதிப்பு இரண்டாம் ஆலையின் பொழுது சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் கட்டளை மையம் தொடங்கப்பட்டது. இந்த கட்டளை மையத்தில் மூலம் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தேவையான மருத்துவமனை படுக்கை வசதிகள் மருத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து தகவலை தெரிந்து கொள்ளவும் இந்த கட்டளை மையம் தொடங்கப்பட்டது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com