புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 ஆயிரத்து 707 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 
Published on

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி  வைத்து வருகிறார். அதன்படி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 9 இடங்களில் 270 புள்ளி 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி வாயிலாக பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் தாமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ்,  பயன்பெறும் 28 ஆயிரத்து 826 பயனாளிகளுக்கு 500 கோடி ரூபாய்  மதிப்பிலான பணி ஆணைகளையும் வழங்கினார். தொடர்ந்து 4 ஆயிரத்து 880 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும், 938 பேருக்கு கிரயப்பத்திரங்களையும் வழங்கிய முதலமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். 

முன்னதாக  போக்குவரத்தை சீர் செய்திட சென்னை காவல்துறைக்கு 14 புள்ளி 71 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ள 93 ரோந்து வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com