தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக கட்டுபாட்டிற்குள் வராத நிலையில், கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூக்கு செல்கிறார். மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை வழியாக இன்று மதியம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.