வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரிப்பன் மாளிகை..! சுவிட்சை தட்டி முதல்வர் இன்று துவக்கி வைப்பு!

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள  ரிப்பன் மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரிப்பன் மாளிகை..! சுவிட்சை தட்டி முதல்வர் இன்று துவக்கி வைப்பு!
Published on
Updated on
1 min read

சட்டமன்றத்தில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் புராதன கட்டடமான ரிப்பன் மாளிகை நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். 

அதனடிப்படையில் 1.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிப்பன் கட்டடத்தின் முகப்பு பகுதியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது பணிகள்  நிறைவடைந்துள்ளன.

சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களை சேர்த்து அவற்றின் மூலம் பல வண்ணங்களை உருவாக்கி தினந்தோறும் ஒளிரூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரிப்பன் கட்டடத்தின் அழகு குறையாத வகையில் இந்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com