இன்று மாலை அபுதாபி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாயில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை அபுதாபி செல்கிறார்.
இன்று மாலை அபுதாபி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின
Published on
Updated on
1 min read

தமிழகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளுக்கு கடந்த 24ம் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். 

துபாயில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர், நேற்று ஐக்கிய அரபு அமீரக முதலீட்டார்களை சந்தித்தார். அப்போது, ஐக்கிய அரபு அமீரக முன்னணி நிறுவனங்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே  2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில் 9 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து,‘நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டு விடாதீர்கள் என தெரிவித்தார்.

துபாயில் தங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை அபுதாபி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்குள்ள இந்திய சமூக கலாச்சார மையம் உள்ளரங்கத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற் றுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழக அரசு உயர் அதிகாரிகள், பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com