சமத்துவ நாயகராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன் புகழாரம்

சமத்துவ நாயகர் என போற்றக்கூடிய வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் செயல்படுகிறார் என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
சமத்துவ நாயகராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன் புகழாரம்
Published on
Updated on
1 min read

அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என அறிவித்த முதல்வரை சென்னை தலைமைச் செயலகத்தில் திருமாவளவன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், முதலமைச்சரின் அறிவிப்பு கோடான கோடி பூர்வகுடி உள்ளங்களில் மகிழ்ச்சியை நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என குறிப்பிட்டார்.

சமபந்தி போஜனம் என்பதை சமத்துவ விருந்து என மாற்றி அமைக்க வேண்டும் என்ற விசிகவின்  கோரிக்கையை ஏற்று  சமத்துவ விருந்து என பெயர் மாற்றி  சமத்துவ நாயகர் என்று போற்றக் கூடிய வகையில் முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com