சிங்கப்பூர் அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று சந்திப்பு...!

சிங்கப்பூர் அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று சந்திப்பு...!
Published on: 
Updated on: 
1 min read

அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிபர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். 

அதன்படி நேற்றைய தினம் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று சிங்கப்பூரில் அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை அமைச்சர் சண்முகம் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com