யார்? யாருக்கு? முதலமைச்சரின் சிறப்பு காவல் பதக்கங்கள்...!

யார்? யாருக்கு? முதலமைச்சரின் சிறப்பு காவல் பதக்கங்கள்...!
Published on
Updated on
1 min read

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 பேருக்கு சிறப்பு பதக்கம்:

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் செயல்பட்ட, சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள் 10 பேருக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்களும், பொதுச்சேவைக்கான பணியைப் பாராட்டி 5 பேருக்கு முதமைச்சரின் காவல் பதக்கமும் வழங்கப்படுகிறது. 

முதலமைச்சரின் சிறப்பு பதக்கம்:

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்களை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கீழ்க்கண்ட அனைவரும் சிறப்பு பதக்கங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மதுரை துணை போலீஸ் கமிஷனர் கோ.ஸ்டாலின், சேலம் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை டி.எஸ்.பி.ச.கிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட காவல் ஆய்வாளர் மா.பிருந்தா, நாமக்கல் மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அ.பிரபா, சென்னை கோடம்பாக்கம் காவல் ஆய்வாளர் வீ.சினிவாசன், திண்டுக்கல் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மா.சுமதி, நாகப்பட்டினம் காவல் ஆய்வாளர் சி.நாகலெட்சுமி, சென்னை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துணை ஆய்வாளர் வெ.துளசிதாஸ், சென்னை புலனாய்வுத் துறை காவல் துணை ஆய்வாளர் ச.ல.பார்த்தசாரதி, சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை ஆய்வாளர் கா. இளையராஜா ஆகியோருக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படவுள்ளது...

முதமைச்சரின் காவல் பதக்கம்:

இதேபோல், பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

இதில் சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கடலூர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அடையாறு சிறப்பு எஸ் ஐ சிவராமன், மதுரை போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ பழனியாண்டி, செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ குமார் ஆகியோருக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பட உள்ளன. 

மேலும், இந்த விருது வழங்கப்படும் ஒவ்வொருவருக்கும், தங்க பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com