திருவாரூர், நாகை சுற்றுப்பயணம்...முதலமைச்சரின் 3 நாள் பயண விவரம் இதோ!

திருவாரூர், நாகை சுற்றுப்பயணம்...முதலமைச்சரின் 3 நாள் பயண விவரம் இதோ!

Published on

திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 3 நாட்களுக்கு திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து நாளை காலை 9 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து இரவு நாகை செல்கிறார். பின்னர் திருக்குவளையில் 25 ஆம் தேதி காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார். முதலமைச்சரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுடனும், காவல் அதிகாரிகளுடனும் வரும் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக, 27 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com