இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள உத்தரவில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ், முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார். மனுக்கள் பரிசீலனை, மின் ஆளுமை ஆகியவற்றைக் கூடுதல் பொறுப்பாக ஷில்பா பிரபாகர் சதீஷ் கவனிப்பார். குறைதீர்ப்பு பிரிவு மின் ஆளுமை பிரிவுகளின் சிறப்பு அதிகாரியாக மறு உத்தரவு வரும் வரை பொறுப்பில் இருப்பார்.