
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைவெள்ளமும் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 4-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்ற அவர், நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக அவர் சமைத்த உணவுகளை ருசிபார்த்தார்.