child harrasment
child harrasment

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு..!!சந்தேகத்தின் பேரில் வடமாநிலத்தவர் கைது!

கடந்த 15 நாட்களாக காவல்துறைக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த விவகாரத்தில் தற்போது ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை ...
Published on

தமிழக ஆந்திர எல்லையோரத்தில் அமைந்துள்ள ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அடர்ந்த மாந்தோப்பு பகுதியில் கடந்த 12 ஆம் தேதி எட்டு வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவர் வட மாநில வாலிபால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

இது தொடர்பாக பள்ளிச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரி அடிப்படையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பள்ளிச்சிறுமி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்பினார்.  

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக காவல்துறைக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த விவகாரத்தில் தற்போது ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து வந்த போலீசார் அவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்த நபர் அவர்தான் என உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் அந்த வட மாநில வாலிபர் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

தற்போது கைது செய்யப்பட்ட நபர் சூளூர்பேட்டையில் உள்ள பஞ்சாபி தாபா ஒன்றில் பணியாற்றி வருவதாகவும், மேற்குவங்கத்தைச் சார்ந்த அவர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இது போல் ரயில் நிலையங்களில் சுற்றி வருவதாகவும் முதல் கட்ட தகவலானது கிடைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன் உறவினர்களும் பொதுமக்களும் அதிக அளவில் ஓடி வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலை வருகிறது. நிலைமையை சமாளிக்க போலீசார் காவல் நிலையம் குவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com