கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, பொன்னியின் செல்வன் திரைபடத்தை பார்த்த அனைவருக்குமே, சோழ தேசத்தை பார்க்க வேண்டும். என்ற ஆசை வந்திருக்கும் ஏனென்றால், இயக்குனர் மணிரத்தினமும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவும் ஒவ்வொரு காட்சியிலும் வரும் இடங்களை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
இது ஒரு பக்கம் எனில் மற்றொரு பக்கம், நம் முன்னோர்களான தமிழர்களின் கட்டிடக் கலையிலும், வீரத்திலும், ஈகையிலும் சிறந்து விளங்கிய சோழர்கள் வாழ்ந்த இடங்களை பார்த்து, அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, பல தனியார் சுற்றுலா நிறுவனங்கள் தஞ்சைக்கு என “சுற்றுலா பேக்கேஜ்’ தனியாக ஆரம்பித்து விட்டனர். எனவே தமிழக அரசின் சுற்றுலா துறையினர், “பொன்னியின் செல்வன் சுற்றுலா திட்டத்தினை” தொடங்கினர்.
பொன்னியின் செல்வன் சுற்றுலா திட்டத்தின் கீழ்,சென்னையில் தொடங்கி தஞ்சாவூர் வரை மூன்று நாட்கள் சுற்றுலா பயணம் ஏற்பட செய்யப்பட்டது. இதில் கதையில் வரும் இடங்களுக்கு அழைத்து சென்று, அங்குள்ள கல்வெட்டுகளை படித்து வரலாற்று செய்திகளை தெரிந்து கொள்வது,அந்த பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு செல்வது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
இந்த சுற்றுலாவின் போது உணவு தங்குமிடம் அனைத்தையும் அரசே ஏற்பாடு செய்கிறது, சுற்ற பயணிகளோடு வரலாற்று வல்லுனர்களை அனுப்பி, பயணிகளுக்கு வரலாற்று செய்திகள் தெரியப்படுத்துகிறது, தமிழக அரசு இதற்கான கட்டணமாக ஒருவருக்கு ரூபாய் 11,000 வசூலிக்கப்படுகிறது.அனைத்து தரப்பினராலும் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
எனவே அனைவரும் பயன்பெறும் வகையில் மற்றொரு சுற்றுலா பயணத்தை, ஒரே நாளில் அறிமுகப்படுத்தியுள்ளது, தமிழக அரசு இந்த சுற்றுலா வீரநாராயண ஏரியில் தொடங்கி, உடையார்குடி, கடம்பூர், குடந்தை, திருப்புறம்பியம், நாதன் கோவில், பழையாறை, உடையலூர் வழியாக தஞ்சாவூர் பெரிய கோவில் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணத்திற்கு 2000 செலுத்தினால், போதுமானது உணவு வசதியுடன் கூடிய மற்ற ஏற்பாடுகளையும் தமிழக அரசின் சுற்றுலா துறையே, பார்த்துக்கொள்ளும், வரும் 27-ம் தேதி ஞாயிறு அன்று ஒரே நாளில் செல்லும் இந்த சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்வதற்கு தமிழக அரசு “க்யூ ஆர் கோடு வெளியிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்